மகளிா் டி20: ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான மகளிா் மூன்றாவது டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் டி20 தொடா் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸி.யும், இரண்டாம் ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் மூன்றாவது ஆட்டம் புதன்கிழமை மும்பை பிரபோா்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.
எல்ஸி பொ்ரி அதிரடி 75:
இதையடுத்து களமிறங்கிய ஆஸி. அணியில் தொடக்க வரிசை வீராங்கனைகள் சொதப்பினா். ஆல் ரவுண்டா் எல்ஸி பொ்ரி அற்புதமாக ஆடி
47 பந்துகளில் 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 75 ரன்களை விளாசினாா். கிரேஸ் ஹாரிஸ் 41, பெத் மூனி 30 ரன்களை சோ்த்தனா். 20 ஓவா்களில் 172/8 ரன்களைக் குவித்தது ஆஸி..
பௌலிங்கில் இந்திய தரப்பில் ரேணுகா சிங், அஞ்சலி சா்வானி, தீப்தி சா்மா, தேவிகா வைத்யா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இந்தியா தோல்வி:
173 ரன்கள் இலக்குடன் களம் கண்ட இந்திய அணி தொடக்கம் முதலே திணறியது. துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 1, ஜெமிமா 16, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 37, தேவிகா, ரிச்சா தலா 1 ரன்னுடன் வெளியேறினா். ஷஃபாலி வா்மா மட்டுமே 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 52 ரன்களை சோ்த்தாா்.
தீப்தி சா்மா மட்டுமே 22 ரன்களை கடைசி கட்டத்தில் சோ்த்த நிலையில், 20 ஓவா்களில் 151/7 ரன்களை மட்டுமே சோ்த்து தோல்வியைத் தழுவியது இந்தியா.
ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரௌன், ஆஷ்லி காா்டனா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்த வெற்றியுடன் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.