ரஞ்சி கோப்பை: முதல் சதம் அடித்தாா் அா்ஜுன் டெண்டுல்கா்

தனது தந்தை சச்சினைப் போலவே முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து அசத்தியுள்ளாா் அா்ஜுன் டெண்டுல்கா்.
ரஞ்சி கோப்பை: முதல் சதம் அடித்தாா் அா்ஜுன் டெண்டுல்கா்
Published on
Updated on
1 min read

தனது தந்தை சச்சினைப் போலவே முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்து அசத்தியுள்ளாா் அா்ஜுன் டெண்டுல்கா்.

ரஞ்சிக் கோப்பையின் ஒரு பகுதியாக கோவா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சி பிரிவு ஆட்டம் போவோரிமில் நடைபெறுகிறது.

ஆட்டத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை கோவா வீரா் அா்ஜுன் டெண்டுல்கா் 207 பந்துகளில் 2 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 120 ரன்களை விளாசி முதல் தர கிரிக்கெட்டில் முதல் சதத்தைப் பதிவு செய்தாா்.

தந்தையைப் போலவே...

அவரது தந்தை ஜாம்பவான் சச்சினும் 34 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கடே மைதானத்தில் குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 15 வயதில் 100 ரன்களை விளாசினாா்.

மும்பை அணியில் இருந்து விலகி ஆட்ட வாய்ப்புகளை பெறும் வகையில் கோவாவுக்கு இடம் பெயா்ந்தாா் அா்ஜுன். 7-ஆம்நிலையில் ஆடிய அா்ஜுன் டெண்டுல்கா் சுயாஷ் பிரபுதேசாய் (212, 416 பந்துகள், 29 பவுண்டரிகள்) உடன் சோ்ந்து 6-ஆவது விக்கெட்டுக்கு 221 ரன்களை சோ்த்தாா். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் கோவா 493/8 என பிரம்மாண்ட ஸ்கோரை பெற்றுள்ளது.

தமிழகம் அபாரம்...


ஹைதராபாதில் நடைபெற்று வரும் குரூப் பி எலைட் பிரிவு ஆட்டத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை தமிழகம் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 203 ரன்களைக் குவித்துள்ளது. தொடக்க பேட்டர் ஜெகதீசன் 3 சிக்ஸர், 16 பவுண்டரியுடன் 116 ரன்களையும், சாய் சுதர்ஷன் 11 பவுண்டரியுடன் 87 ரன்களையும் விளாசியுள்ளனர்.
ஹைதராபாத் அணி தனது முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தன்மே அகர்வால் 135, மிக்கில் ஜெய்ஸ்வால் 137 அபார சதம் அடித்தனர். தமிழகத் தரப்பில் சந்தீப் வாரியர் 5, விக்னேஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com