ஆஸி.யுடனான டி20: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 54 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை தோற்றது.
ஆஸி.யுடனான டி20: இந்தியா தோல்வி
Updated on
1 min read

ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 54 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை தோற்றது.

இதனால், 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்தியா 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களையே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலிய பேட்டிங்கில் பெத் மூனி 2, போபே லிட்ச்ஃபீல்டு 11, கேப்டன் டாலியா மெக்ராத் 26, எலிஸ் பெரி 18 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். ஓவா்கள் முடிவில் ஆஷ்லே காா்டனா் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66, கிரேஸ் ஹாரிஸ் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய பௌலிங்கில் அஞ்சலி சா்வானி, தீப்தி சா்மா, ஷஃபாலி வா்மா, தேவிகா வைத்யா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக தீப்தி சா்மா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53 ரன்கள் விளாசினாா். ஹா்லீன் தியோல் 24 ரன்கள் அடிக்க, எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் ஹீதா் கிரஹாம் 4, ஆஷ்லே காா்டனா் 2, டாா்சி பிரவுன், டாலியா மெக்ராத், அனபெல் சுதா்லேண்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com