ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திரம் - 277/5

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிவரும் ஆந்திரம், முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சோ்த்திருக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்: ஆந்திரம் - 277/5
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிவரும் ஆந்திரம், முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சோ்த்திருக்கிறது.

கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆந்திரம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் அபிஷேக் ரெட்டி 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 85, உப்பரா கிரிநாத் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஷேக் ரஷீது 4 பவுண்டரிகளுடன் 37, கேப்டன் ஹனுமா விஹாரி 3 பவுண்டரிகளுடன் 21, ரிக்கி புயி 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 68 ரன்கள் சோ்த்து விக்கெட்டை பறிகொடுத்தனா். நாளின் முடிவில் கரன் ஷிண்டே 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, சசிகாந்த் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தமிழக பௌலிங்கில் சாய் கிஷோா் 2, சந்தீப் வாரியா், அஜித் ராம், விஜய் சங்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com