தமிழக வீரர்களுக்கு ஏமாற்றமளித்த ஐபிஎல் ஏலம்!

ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் போட்டியிட்டதில் மூவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள்.
பாபா இந்திரஜித் (வலது)
பாபா இந்திரஜித் (வலது)

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. 

இந்த ஏலத்தில் 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 

ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் போட்டியிட்டதில் மூவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்வான வீரர்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகிய அணிகளிலிருந்து தலா 13 வீரர்கள் ஏலத்தில் தேர்வானார்கள். ஏலத்தில் அதிகத் தொகை செலவிடப்பட்டது தமிழக வீரர்களுக்குத்தான். ரூ. 39.55 கோடி. ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இவர்களில் 9 பேர் நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்டார்கள்.

ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட தமிழக வீரர்கள்

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) - ரூ. 8 கோடி
4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
7. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்

ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பு 5 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

ஐபிஎல் 2022 போட்டியில் இடம்பெற்று, அணிகளால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்

1. எம். அஸ்வின் (மும்பை)
2. சஞ்சய் யாதவ் (மும்பை)
3. என். ஜெகதீசன் (சிஎஸ்கே)
4. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே)
5. பாபா இந்திரஜித் (கேகேஆர்) 

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற 16 தமிழக வீரர்கள்

1. என். ஜெகதீசன்
2. எம். அஸ்வின்
3. பாபா இந்திரஜித்
4. அஜித் ராம்
5. சந்தீப் வாரியர்
6. ஹரி நிஷாந்த்
7. எம். சித்தார்த்
8. சஞ்சய் யாதவ்
9. அஜிதேஷ்
10. சுரேஷ் குமார்
11. ராக்கி பாஸ்கர்
12. அனிருத் சீதாராம்
13. பி. சூர்யா
14. சோனு யாதவ்
15. பாபா அபரஜித்
16. திரிலோக் நாக்

ஐபிஎல் 2023 ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்

1. ஜெகதீசன் (கேகேஆர்) - ரூ. 90 லட்சம் 
2. எம் அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 20 லட்சம்
3. சோனு யாதவ் (ஆர்சிபி) - ரூ. 20 லட்சம்

ஐபிஎல் 2023 ஏலத்தில் தேர்வாகாத தமிழக வீரர்கள்

பாபா இந்திரஜித்
பாபா அபரஜித்
அஜித் ராம்
சந்தீப் வாரியர்
ஹரி நிஷாந்த் 
எம். சித்தார்த் 
சஞ்சய் யாதவ்
அஜிதேஷ் 
சுரேஷ் குமார்
ராக்கி பாஸ்கர்
திரிலோக் நாக்
அனிருத் சீதாராம்
பி. சூர்யா 

ஐபிஎல் 2023 போட்டியில் மொத்தமாக 12 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். கடந்த வருடத்தை விடவும் 2 பேர் குறைவு தான். 

ஐபிஎல் 2023 போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்கள் 

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) - ரூ. 8 கோடி
4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
7. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. ஜெகதீசன் (கேகேஆர்) - ரூ. 90 லட்சம் 
10. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்
11. எம் அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 20 லட்சம்
12. சோனு யாதவ் (ஆர்சிபி) - ரூ. 20 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com