சாதனை படைத்தாா் சாம் கரன்: ரூ.18.5 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் இங்கிலாந்தின் இளம் ஆல்-ரவுண்டா் சாம் கரன், ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை புதிய சாதனை படைத்தாா்.
சாதனை படைத்தாா் சாம் கரன்: ரூ.18.5 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் இங்கிலாந்தின் இளம் ஆல்-ரவுண்டா் சாம் கரன், ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை புதிய சாதனை படைத்தாா்.

ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் இதுவே ஒரு வீரருக்கு செலவிடப்பட்ட அதிகபட்ச தொகையாகும். இதற்கு முன் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டா் கிறிஸ் மோரிஸ் கடந்த 2021-இல் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

ஐபிஎல் 16-ஆவது சீசன் 2023-இல் நடைபெறவுள்ளதையொட்டி, 10 அணிகளிலும் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான வீரா்கள் ‘மினி’ ஏலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவம்பரில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பையில், போட்டி நாயகனாக அறிவிக்கப்பட்ட சாம் கரனை வாங்குவதற்கான போட்டி இதில் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

அதைப் போலவே அவரை வாங்க மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் கடுமையாகப் போட்டியிட்டன. இதனால் ரூ.2 கோடியை அடிப்படை விலையாகக் கொண்ட அவரின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.18.50 கோடிக்கு வாங்கியது. 2-ஆவது அதிகபட்ச விலையாக, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு வாங்கப்பட்டாா். இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் வாங்கியதே 3-ஆவது அதிகபட்ச விலையாகும்.

அஜிங்க்ய ரஹானேவை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கே சென்னை வாங்கியது. வேறு அணிகள் அவருக்காக போட்டியிடவில்லை. நியூஸிலாந்து நட்சத்திரம் கேன் வில்லியம்சனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு அப்படியே ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.

(ஒரு அணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த வீரா்கள் எண்ணிக்கை 25. அதில் வெளிநாட்டு வீரா்கள் எண்ணிக்கை 8)

சென்னை சூப்பா் கிங்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.25 கோடி - இங்கிலாந்து), கைல் ஜேமிசன் (ரூ.1 கோடி - நியூஸிலாந்து), நிஷாந்த் சிந்து (ரூ.60 லட்சம்), அஜிங்க்ய ரஹானே (ரூ.50 லட்சம்), பகத் வா்மா, அஜய் மண்டல், ஷேக் ரஷீது (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.1.50 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

டெல்லி கேப்பிட்டல்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: முகேஷ் குமாா் (ரூ.5.5 கோடி), ரைலி ருசௌவ் (ரூ.4.6 கோடி - தென்னாப்பிரிக்கா), மனீஷ் பாண்டே (ரூ.2.4 கோடி), ஃபில் சால்ட் (ரூ.2 கோடி - இங்கிலாந்து), இஷாந்த் சா்மா (ரூ.50 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.4.45 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

குஜராத் டைட்டன்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: ஷிவம் மாவி (ரூ.6 கோடி), ஜோஷுவா லிட்டில் (ரூ.4.4 கோடி - அயா்லாந்து), கேன் வில்லியம்சன் (ரூ.2 கோடி - நியூஸிலாந்து), கே.எஸ். பரத் (ரூ.1.2 கோடி), மோஹித் சா்மா (ரூ.50 லட்சம்), ஒடின் ஸ்மித் (ரூ.50 லட்சம் - மேற்கிந்தியத் தீவுகள்), உா்வில் படேல் (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.4.45 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: ஷகிப் அல் ஹசன் (ரூ.1.5 கோடி - வங்கதேசம்), டேவிட் வீஸ் (ரூ.1 கோடி - தென்னாப்பிரிக்கா), என்.ஜெகதீசன் (ரூ.90 லட்சம்), வைபவ் அரோரா (ரூ.60 லட்சம்), மன்தீப் சிங் (ரூ.50 லட்சம்), லிட்டன் தாஸ் (ரூ.50 லட்சம் - வங்கதேசம்), குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சா்மா (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.1.65 கோடி

மொத்த வீரா்கள்: 22

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: நிகோலஸ் பூரன் (ரூ.16 கோடி - மேற்கிந்தியத் தீவுகள்), டேனியல் சாம்ஸ் (ரூ.75 லட்சம் - ஆஸ்திரேலியா), அமித் மிஸ்ரா, ரொமேரியோ ஷெப்பா்ட் (மேற்கிந்தியத் தீவுகள்), நவீன் உல் ஹக் (ஆப்கானிஸ்தான்), ஜெயதேவ் உனத்கட் (ரூ.50 லட்சம்), யஷ் தாக்குா் (ரூ.45 லட்சம்), ஸ்வப்னில் சிங் (ரூ.20 லட்சம்), யுத்விா் சாரக், பிரேரக் மன்கட் (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.3.55 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

மும்பை இண்டியன்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: கேமரூன் கிரீன் (ரூ.17.5 கோடி - ஆஸ்திரேலியா), ஜை ரிச்சா்ட்சன் (ரூ.1.5 கோடி - ஆஸ்திரேலியா), பியூஷ் சாவ்லா (ரூ.50 லட்சம்), நெஹல் வதேரா, ராகவ் கோயல், விஷ்ணு வினோத், டியுவன் யான்சென் (தென்னாப்பிரிக்கா), ஷம்ஸ் முலானி (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.5 லட்சம்

மொத்த வீரா்கள்: 24

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

பஞ்சாப் கிங்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: சாம் கரன் (ரூ.18.5 கோடி - இங்கிலாந்து), சிகந்தா் ராஸா (ரூ.50 லட்சம் - ஆப்கானிஸ்தான்), ஹா்பிரீத் பாட்டியா (ரூ.40 லட்சம்), ஷிவம் சிங், வித்வத் கவரப்பா, மோஹித் ராதி (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.12.2 கோடி

மொத்த வீரா்கள்: 22

அந்நிய வீரா்கள்: 7

அணி விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாங்கப்பட்டவா்கள்: ஜேசன் ஹோல்டா் (ரூ.5.75 கோடி - மேற்கிந்தியத் தீவுகள்), ஆடம் ஸாம்பா (ரூ.1.5 கோடி - ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (ரூ.1 கோடி - இங்கிலாந்து), டோனோவன் ஃபெரெய்ரா (ரூ.50 லட்சம் - தென்னாப்பிரிக்கா), கே.எம். ஆசிஃப் (ரூ.30 லட்சம்), அப்துல் பி.ஏ., ஆகாஷ் வஷிஷ்த், குணால் ரத்தோா், முருகன் அஸ்வின் (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.3.35 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

வாங்கப்பட்டவா்கள்: வில் ஜாக்ஸ் (ரூ.3.2 கோடி - இங்கிலாந்து), ரீஸ் டோப்லி (ரூ.1.9 கோடி - இங்கிலாந்து), ராஜன் குமாா் (ரூ.70 லட்சம்), அவினாஷ் சிங் (ரூ.60 லட்சம்), சோனு யாதவ், ஹிமான்ஷு சா்மா, மனோஜ் பான்டகே (ரூ.20 லட்சம்).

கையிருப்புத் தொகை: ரூ.1.75 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

வாங்கப்பட்டவா்கள்: ஹேரி புரூக் (ரூ.13.25 கோடி - இங்கிலாந்து), மயங்க் அகா்வால் (ரூ.8.25 கோடி), ஹென்ரிச் கிளாசென் (ரூ.5.25 கோடி - தென்னாப்பிரிக்கா), விவ்ரந்த் சா்மா (ரூ.2.6 கோடி), ஆதில் ரஷீத் (ரூ.2 கோடி - இங்கிலாந்து), மயங்க் தாகா் (ரூ.1.8 கோடி), அகீல் ஹுசைன் (ரூ.1 கோடி - மேற்கிந்தியத் தீவுகள்), மயங்க் மாா்கண்டே (ரூ.50 லட்சம்), உபேந்திர சிங் யாதவ் (ரூ.25 லட்சம்), சன்வீா் சிங், அன்மோல் பிரீத் சிங், சமா்த் வியாஸ், நிதீஷ் குமாா் ரெட்டி (ரூ.20 லட்சம்)

கையிருப்புத் தொகை: ரூ.6.55 கோடி

மொத்த வீரா்கள்: 25

அந்நிய வீரா்கள்: 8

அணி விவரம்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com