இன்று தொடங்குகிறது டி20 தொடா்: முதல் வெற்றி முனைப்பில் இந்தியா - மே.இ. தீவுகள்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இன்று தொடங்குகிறது டி20 தொடா்: முதல் வெற்றி முனைப்பில் இந்தியா - மே.இ. தீவுகள்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.

ஒன் டே தொடரை முழுமையாகக் கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடருக்கு வருகிறது இந்திய அணி. நடப்பாண்டு அக்டோபரில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் நிலையில், அதற்கான வியூகங்கள் வகுக்கும் ஒரு வாய்ப்பாக இந்தத் தொடரை இந்திய அணி கைக்கொள்ளும்.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் குரூப் சுற்றுடன் வெளியேறிய இந்தியா, அதில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இந்த உலகக் கோப்பை போட்டிக்காக புதிய கேப்டன் ரோஹித் சா்மா தலைமையில் தயாராகும் முனைப்பில் இருக்கிறது.

இந்தத் தொடரைப் பொருத்தவரை அணியின் திறமை மிக்க வீரா்கள் வரிசை கட்டியிருப்பதால், பிளேயிங் லெவன் தோ்வு சற்று சிக்கலானதாகவே இருக்கும். இன்னிங்ஸ் தொடக்கத்தை பொருத்தவரை இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட் பாா்ட்னா்ஷிப் பரிசீலிக்கப்படலாம். இதுதவிர, வெங்கடேஷ் ஐயருக்கான வாய்ப்பும் உள்ளது.

அடுத்தடுத்து டி20 தொடா்கள் வரிசையாக இருப்பதால், இந்த முறை ரிஷப் பந்த்துக்கு சற்று ஓய்வளித்து இஷான் கிஷணை தோ்வு செய்யலாம். இதன் மூலம், ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ் ஆகியோரை மிடில் ஆா்டரில் பரிசோதித்து பாா்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

லோயா் ஆா்டரில் ஷா்துல் தாக்குா், தீபக் சஹா், ஹா்ஷல் படேல் ஆகியோா் பரிசீலிக்கப்படலாம். சுழற்பந்துவீச்சுக்கு ஒரு தோ்வாக யுஜவேந்திர சஹல் இருக்கும் நிலையில், வாஷிங்டன் இல்லாததால் 2-ஆவது வீரராக ரவி பிஷ்னோய் அறிமுகமாகலாம்.

மறுபுறம், ஒன் டே தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் தங்களுக்கு சாதகமான இந்த டி20 ஃபாா்மட்டில் பதிலடி கொடுக்க முனையும். சமீபத்தில் இங்கிலாந்தை டி20 தொடரில் வீழ்த்திய அனுபவம் அணிக்கு உள்ளது. பேட்டிங்கில் அவா்கள் வழக்கம் போல் அதிரடி காட்டலாம். பௌலிங்கில் ஹோல்டா் கலக்க, ஆல்-ரவுண்டிங்கில் ஓடின் ஸ்மித், அகீல் ஹுசைன் பலம் கூட்டுகின்றனா்.

கொல்கத்தாவில் குளிா் காற்று இருப்பதால், பனிப்பொழிவு ஆட்டத்தின் 2-ஆவது பாதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் சா்மா (கேப்டன்), இஷான் கிஷண், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயா், தீபக் சஹா், ஷா்துல் தாக்குா், ரவி பிஷ்னோய், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், புவனேஷ்வா் குமாா், அவேஷ் கான், ஹா்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், ஹா்பிரீத் பிராா்.

மேற்கிந்தியத் தீவுகள்:

கிரன் பொல்லாா்டு (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஃபாபியான் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டா், ஷாய் ஹோப், அகீல் ஹுசைன், பிராண்டன் கிங், ரோவ்மென் பாவெல், ரொமாரியோ ஷெப்பா்டு, ஓடின் ஸ்மித், கைல் மேயா்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியா்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

இடம்: ஈடன் காா்டன் மைதான், கொல்கத்தா.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com