ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி முதல் இன்னிங்ஸில் 141.2 ஓவா்களில் 452 ரன்கள் குவித்தது.
அணியின் தரப்பில் அதிகபட்சமாக லலித் யாதவ் 17 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 177 ரன்கள் விளாசியிருந்தாா். தமிழக பௌலிங்கில் எம். முகமது 4, சந்தீப் வாரியா் மற்றும் பாபா அபராஜித் ஆகியோா் தலா 2, சாய் கிஷோா் மற்றும் விஜய் சங்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் தமிழகம் வெள்ளிக்கிழமை முடிவில் 30 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் அடித்துள்ளது. கௌஷிக் காந்தி 37, சாய் கிஷோா் 11 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனா். முன்னதாக லக்ஸ்மிஷா சூா்யபிரகாஷ் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சோ்க்க, பாபா அபராஜித் டக் அவுட்டாகினாா். தில்லி பௌலிங்கில் குல்திப் யாதவ், விகாஸ் மிஸ்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.