படம் - twitter.com/LucknowIPL
படம் - twitter.com/LucknowIPL

யோகி ஆதித்யநாத்துக்கு பேட்டைப் பரிசளித்த லக்னெள ஐபிஎல் அணி

உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த லக்னெள அணியினர் அவருக்கு அணியின் முதல் பேட்டைப் பரிசாக வழங்கியுள்ளார்கள்


உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த லக்னெள அணியினர் அவருக்கு அணியின் முதல் பேட்டைப் பரிசாக வழங்கியுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜயன்ட்ஸ் அணி உரிமையாளராக இருந்தது.

லக்னெள அணியின் பெயர் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அணியின் இலச்சினையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்துள்ளார்கள் லக்னெள அணியினர். லக்னெள அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவும் அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீரும் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து அணியின் முதல் பேட்டைப் பரிசாக வழங்கினார்கள். இத்தகவலை லக்னெள அணி, ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் முடிந்த ஐபிஎல் ஏலத்தில் டி காக், எவின் லூயிஸ், அவேஷ் கான், மார்க் வுட், ஹோல்டர், கிருனால் பாண்டியா, தீபக் ஹுடா போன்ற வீரர்களை லக்னெள அணி தேர்வு செய்தது. ஏலத்துக்கு முன்பு கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ், ரவி பிஸ்னாய் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com