

இலங்கை, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குணதிலகா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
ஐந்து ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி, இலங்கை அணி 25 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கை அணியில் முதல் போட்டியில் விளையாடாத குணதிலகா, பெர்ணான்டோ ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்திய அணியில் மாற்றம் எதவும் மேற்கொள்ளப்படவில்லை.
முதல் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் களம் கண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.