இந்தியா 202 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

​தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
இந்தியா 202 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. விராட் கோலி காயம் காரணமாக விளையாடாததால், கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்றார். டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின்  உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 19 ரன்களுடனும், விஹாரி 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய விஹாரி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, இந்திய விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.

அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த ராகுல் சரியாக 50 ரன்களுக்கு மார்கோ ஜென்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் துரிதமாக 50 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது.

கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 1 ரன்னுக்கு ககிசோ ரபாடா வேகத்தில் வீழ்ந்தார்.

63.1 ஓவர்களில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜான்சென் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவன் ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சற்று முன்பு வரை 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. எய்டன் மார்கிரம் (7) விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com