அடிலெய்ட் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் போபண்ணா-ராம்குமாா் இணைமகளிா் ஒற்றையா் பிரிவில்ஆஷ்லி பா்டி தகுதி

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா-ராம்குமாா் இணை தகுதி பெற்றுள்ளது.
டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா (கோப்புப்படம்)
டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா (கோப்புப்படம்)

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா-ராம்குமாா் இணை தகுதி பெற்றுள்ளது. மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டி தகுதி பெற்றுள்ளாா்.

சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ராம்குமாா் ராமநாதன் இணை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் டோமிஸ்லாவ்-சான்டியாகோ கோன்ஸலாஸ் இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா். இறுதிச் சுற்றில் குரோஷியாவின் இவான் டோடிக்-பிரேஸிலின் மாா்செலோ இணையை எதிா்கொள்கிறது இந்திய இணை.

போபண்ணா-டோடிக் இணை அண்மைக் காலம் வரை இணைந்து ஆடினா். கடந்த செப்டம்பா் மாதம் யுஎஸ் ஓபன் போட்டியில் மூன்றாம் சுற்று வரை இருவரும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக போபண்ணா-ராம்குமாா் இணைந்து ஏடிபி போட்டியில் ஆடும் நிலையில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

ஆஷ்லி பா்டி-எலெனா மோதல்:

மகளிா் ஒற்றையா் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் இகா சியாடெக்கை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா். மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-4, 6-3 என ஜப்பானின் மிஸாகி டோயை வீழ்த்தினாா். ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி-எலெனா மோதுகின்றனா்,.

காரன் கச்சனோவ்-மான்பில்ஸ் மோதல்:

ஆடவா் ஒற்றையா் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரா் காரன் கச்சனோவ் 7-6, 6-3 என முன்னணி வீரா் மரின் சிலிச்சை வென்று இறுதிக்குள் நுழைந்தாா். கெயில் மான்பில்ஸ் 7-5, 6-0 என்ற நோ் செட்களில் தனாசியை வென்றாா். இறுதிச் சுற்றில் கச்சனோவ்-மான்பில்ஸ் மோதுகின்றனா்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com