சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி
Updated on
1 min read


ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.

297 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய விராட் கோலி 9-வது ரன்னை எடுத்தபோது இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை அடைந்தார். சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 5,065 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. 

கேப்டன் பொறுப்புகளிலிருந்து விலகிய பிறகு விராட் கோலி விளையாடும் முதல் ஒருநாள் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com