ஹர்பஜன் சிங்குக்கு கரோனா

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.
ஹர்பஜன் சிங்குக்கு கரோனா
Updated on
1 min read

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

41 வயது ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1998-லிருந்து இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்த ஹர்பஜன் சிங், கடைசியாக 2016-ல் விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 163 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா ஆகிய இருவரும் 2015-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியருக்கு 2016-ல் மகளும் கடந்த வருட ஜூலை மாதம் ஆண் குழந்தையும் பிறந்தன. பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிகையாகத் தமிழில் அறிமுகமான பிரண்ட்ஷிப் படத்தின் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் கரோனாவால் ஹர்பஜன் சிங் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

குறைவான அறிகுறிகளுடன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com