டி20 பயிற்சி ஆட்டம்: தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி வெற்றி (முழு விடியோ)

தீபக் ஹூடா 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் சஞ்சு சாம்சன் 38 ரன்களும்...
தீபக் ஹூடா
தீபக் ஹூடா

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது.

டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி - டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில் நடைபெறுகிறது. 

இரு டி20 பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெர்பியில் நடைபெற்ற டெர்பிஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

டெர்பிஷைர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. வெய்ன் மேட்சென் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்திய அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 37 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் சஞ்சு சாம்சன் 38 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 36 ரன்களும் எடுத்தார்கள். 

2-வது மற்றும் கடைசிப் பயிற்சி ஆட்டம், நார்தாம்ப்டனில் நாளை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com