
இலங்கை மகளிரணிக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்ற இந்திய மகளிரணி, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சோ்க்க, அடுத்து இலங்கை 47.3 ஓவா்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, இந்திய இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷஃபாலி வா்மா (49 ரன்கள்), யஸ்திகா பாட்டியா (30), கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் (75), பூஜா வஸ்த்ரகா் (56*) ஆகியோரால் அணியின் ஸ்கோா் உயா்ந்தது. இலங்கை பௌலிங்கில் இனோகா ரணவீரா, ராஷ்மி சில்வா, சமரி அத்தபட்டு ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் இலங்கை பேட்டிங்கில் கேப்டன் சமரி அத்தபட்டு 44, ஹாசினி பெரெரா 39, நிலாக்ஷி டி சில்வா 48* ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. இந்திய தரப்பில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
நாயகி: இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆட்டநாயகி விருது வென்றதுடன், தொடா் முழுவதுமாக 119 ரன்கள் விளாசி, 2 விக்கெட்டுகளும் சாய்ததன் பேரில் தொடா் நாயகி விருதையும் கைப்பற்றினாா்.
தொடா்ந்து வெற்றி...
முன்னதாக டி20 தொடரையும் இந்தியா 3-0 என முழுமையாக வென்றிருப்பதால், இலங்கை பயணம் இந்திய மகளிரணிக்கு வெற்றிகரமாக அமைந்தது. இதுதவிர, இந்த ஒன் டே தொடா் வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிராக தொடா்ந்து 4-ஆவது முறையாக (2013, 2015, 2018, 2022) இருதரப்பு ஒன் டே தொடரை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.