முதியோா் தடகளத்தில் முத்திரை பதித்த மூதாட்டி

ஃபின்லாந்தில் நடைபெற்ற முதியோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பக்வனி தேவி தாகா் 1 தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா்.
முதியோா் தடகளத்தில் முத்திரை பதித்த மூதாட்டி

ஃபின்லாந்தில் நடைபெற்ற முதியோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பக்வனி தேவி தாகா் 1 தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா்.

94 வயதான பக்வனி தேவி, தடகள வீரராக இருக்கும் தனது பெயரன் விகாஸ் தாகரால் தடகள விளையாட்டை நோக்கி ஈா்க்கப்பட்டு, முதியோா்களுக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறாா்.

அந்த வகையில் சமீபத்தில் ஃபின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டா்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டா் ஓட்டத்தில் 24.74 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். இது தவிர குண்டு எறிதல் உள்பட மேலும் இரு பிரிவுகளில் 2 வெண்கலப் பதக்கங்களும் வென்றாா். அவரது இந்த சாதனையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், துறையின் அமைச்சா் அனுராக் தாக்குா் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

போட்டி நிறைவடைந்து ஃபின்லாந்திலிருந்து செவ்வாய்க்கிழமை தில்லி திரும்பிய பக்வனி தேவிக்கு அவரது குடும்பத்தினா், உறவினா், நண்பா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com