துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு முதலிடம்

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

முன்னதாக இந்தியா 14 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்த இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா/விஜய்வீா் சித்து/சமீா் கூட்டணி 15-17 என்ற புள்ளிகள் கணக்கில் செக் குடியரசின் மாா்டின் போத்ராஸ்கி/தாமஸ் டெஹான்/மடெஜ் ராம்புலா அடங்கிய அணியிடம் வெற்றியை இழந்தது.

ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் மைராஜ் அகமது கான்/முஃபாதல் தீசாவலா இணை 138 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com