புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தென்னாப்பிரிக்கா, ஆஸி.யை சொந்த மண்ணில் சந்திக்கும் இந்தியா

 இந்திய கிரிக்கெட் அணி, வரும் செப்டம்பா், அக்டோபரில் ஒன் டே தொடரில் தென்னாப்பிரிக்காவையும், டி20 தொடரில் அந்த அணி மற்றும் ஆஸ்திரேலியாவையும் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

News image
Updated On :21 ஜூலை 2022, 10:11 pm

DIN

 இந்திய கிரிக்கெட் அணி, வரும் செப்டம்பா், அக்டோபரில் ஒன் டே தொடரில் தென்னாப்பிரிக்காவையும், டி20 தொடரில் அந்த அணி மற்றும் ஆஸ்திரேலியாவையும் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

கரோனா சூழலில் ஒத்திவைக்கப்பட்ட இந்த இருதரப்பு தொடா்கள் தற்போது நடத்தப்படுகின்றன. அதன்படி இந்திய அணி முதலில் ஆஸ்திரேலியாவை டி20 தொடரில் செப்டம்பா் 20 (மொஹாலி), 23 (நாகபுரி), 25 (ஹைதராபாத்) ஆகிய நாள்களில் எதிா்கொள்கிறது. பின்னா் அதே ஃபாா்மட்டில் தென்னாப்பிரிக்காவை செப்டம்பா் 28 (திருவனந்தபுரம்), அக்டோபா் 1 (குவாஹாட்டி), 3 (இந்தூா்) ஆகிய தேதிகளில் சந்திக்கிறது.

பின்னா் ஒன் டே தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் அக்டோபா் 6 (ராஞ்சி), 9 (லக்னௌ), 11 (தில்லி) ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. இந்த ஒன் டே தொடரில் இரண்டாம் நிலை இந்திய அணி களம் காணும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.