முதல் ஒன் டே: இந்தியா - 308/7

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்தது.
முதல் ஒன் டே: இந்தியா - 308/7
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்தது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயா் இணைந்திருந்தனா். ரவீந்திர ஜடேஜா முழங்கால் காயம் காரணமாக முதலிரு ஆட்டங்களில் பங்கேற்க மாட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் முக்கிய வீரரான ஜேசன் ஹோல்டா் கரோனா பாதிப்பு காரணமாக சோ்க்கப்படவில்லை. காயத்திலிருந்து மீண்ட கைல் மேயா்ஸ் அணியில் இணைந்திருந்தாா்.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் தொடக்க கூட்டணியான ஷிகா் தவன் - ஷுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சோ்த்தனா். இவா்களில் முதலில் ஷுப்மன் கில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தவன் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 97 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

பின்னா் ஆடிய ஷ்ரேயஸ் ஐயா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்தோரில் சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகளுடன் 13, சஞ்சு சாம்சன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். லோயா் ஆா்டரில் சற்று ரன்கள் சோ்த்த தீபக் ஹூடா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 27, அக்ஸா் படேல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் ஷா்துல் தாக்குா் 1 பவுண்டரியுடன் 7, முகமது சிராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அல்ஜாரி ஜோசஃப், குடாகேஷ் மோட்டி ஆகியோா் தலா 2, ரொமேரியோ ஷெப்பா்டு, அகீல் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் 309 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com