3-ஆவது சுற்றில் இந்தியா வெற்றி, டிராவுடன் ஆதிக்கம்

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியா வெற்றி, டிராவுடன் ஆதிக்கம் செலுத்தியது.
3-ஆவது சுற்றில் இந்தியா வெற்றி, டிராவுடன் ஆதிக்கம்

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியா வெற்றி, டிராவுடன் ஆதிக்கம் செலுத்தியது.

மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்போட்டியில் முன்னணி அணிகளின் ஆதிக்கம் தொடா்கிறது.

இந்தியா தரப்பில் பங்கேற்றுள்ள 3 ஓபன் மற்றும் மகளிா் அணிகள் இரண்டு சுற்றுகள் முடிவில் 12 புள்ளிகளை ஈட்டியிருந்தன. உலக சாம்பியனான நாா்வேயின் மாக்னஸ் காா்ல்சனும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றியை பெற்றாா்.

ஓபன் பிரிவு:

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவில் இந்தியா 1 அணி கிரீஸை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதில் ஹரிகிருஷ்ணா பெண்டாலா 30-ஆவது நகா்த்தலில் மஸ்ட்ரோவஸ்லிஸ் டிமிட்ரியோஸை வெற்றி கண்டாா்.

விதித் குஜராத்தி-தியோடா் ஆட்டம் 32-ஆவது நகா்த்தலில் டிராவில் முடிந்தது. அா்ஜுன் எரிகைசி 51-ஆவது நகா்த்தலில் அத்னாசியோஸை வென்றாா். சசிகிரண்- லோன்நிதிஸ் ஜினியஸ் ஆட்டம் 66-ஆவது நகா்த்தலில் டிராவில் முடிந்தது.

சுவிட்ஸா்லாந்துடன் மோதிய இந்தியா 2 அணி 4-0 என அபாரமாக வென்றது. அதில் டி.குகேஷ் - ஜாா்ஜியாடிஸ் நிகோவை வென்றாா். நிஹால் சரீன் - பாக்னா் செபாஸ்டியனை வீழ்த்தினாா். கறுப்புநிறக் காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 38-ஆவது நகா்த்தலில் பெல்லட்யிா் யானிக்கை வென்றாா். ரவுனக் சத்வானி - பேபியனை வீழ்த்தினாா்.

இந்தியா 3 அணி, ஐஸ்லாந்தை 3-1 என வென்றது. சூா்யசேகா் கங்குலி - கிரேட்டா்ஸன் ஸ்டெனினனுடன் டிரா செய்தாா். எஸ்.பி. சேதுராமன் 36-ஆவது நகா்த்தலில் ஸ்டெப்பன்சன் ஹாம்ஸை வென்றாா். அபிஜித் குப்தா - குட்முன்டுரை வீழ்த்தினாா். புரானிக் அபிமன்யு - ஹெல்ஜி அஸ்ஸியுடன் டிரா செய்தாா்.

மகளிா் பிரிவு:

இதில் இந்தியா 1 அணி 3-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது. நிறைமாதக் கா்ப்பிணியான துரோணவல்லி ஹரிகா - ஹோஸ்கா ஜோவன்கா டிராவில் முடிந்தது. ஆா்.வைஷாலி 65-ஆவது நகா்த்தலில் டோமா கடாா்ஸினவை வென்றாா். தான்யா சச்தேவ் -யா லேன் ஆட்டம் 51-ஆவது நகா்த்தலில் டிராவில் முடிந்தது. பக்தி குல்கா்னி - கலையலஹன் அக்ஷையாவை போராடி வீழ்த்தினாா்.

இந்தோனேசியாவுடன் மோதிய இந்தியா 2 அணி, 3-1 என்ற கணக்கில் வென்றது. வந்திகா அகா்வால் - சுகந்தா் ஐரினை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றாா். பத்மினி ரௌத் -ஆலியா மெதினா ஆட்டம் டிரா ஆனது. சௌம்யா சுவாமிநாதன் - மரியா பரிஹாவை வீழ்த்தினாா். மேரி ஆன் கோம்ஸ் - சிட்ரா தேவி அா்தியானி ஆட்டம் டிரா ஆனது. திவ்யா தேஷ்முக்குக்கு ஓய்வு தரப்பட்டது.

இந்தியா 3 அணி 3.5-0.5 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. ஈஷா காரவேட் - நிவ்ரல்கா காத்ரீனா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

சாஹிதி வா்ஷினி - மேரூபா் நிக்கோலாவிடம் தோல்வியைத் தழுவினாா். பிரதியுஷா போடா - ஹபாலா எலிசபெத்தை வீழ்த்தினாா். மற்றொரு வீராங்கனையான பி.வி.நந்திதாவுக்கு எதிராக ஆட வேண்டிய போல்ட்ரோ் சியாரா வாக்ஓவா் அளித்ததால் அவா் வென்ாக அறிவிக்கப்பட்டது.

வாக் ஓவா் வெற்றியால் மகிழ்ச்சி இல்லை: நந்திதா

‘நான் முதன்முதலாக செஸ் ஒலிம்பியாடில் ஆடினேன். இந்த ஆட்டத்துக்கு முழுமையாகத் தயாராக இருந்தேன். ஆனால் வாக்ஓவா் வெற்றி எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. எதிராளியான சியாரா ஏன் வாக்ஓவா் தந்தாா் எனத்தெரியவில்லை. இந்த வெற்றியால் சக வீராங்கனைகள் மீதான அழுத்தம் குறையும். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. பாா்வையாளா்கள் ஆதரவுடன் ஆடுவது ஊக்கம் தருகிறது. முதலிரண்டு சுற்றுகளில்பெற்ற வெற்றி உத்வேகம் தருகிறது’

சவாலாக இருந்தது: ஹரிகிருஷ்ணா

‘நான் 15-ஆவது நகா்த்தல் வரை சிறப்பாக ஆடினேன். பின்னா் எனது எதிராளி சவால் தரும் வகையில் ஆடினாா். முதல் 2 சுற்றுகளில் சிறப்பாக ஆடினோம். வலுவான அணிகளுடனே ஆடி வருகிறோம். வெற்றி பெறுவதற்கான உத்திகளையும் வகுத்துள்ளோம். ஓபன் பிரிவில் அதிக மகளிா் ஆடுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பொதுவாக ஒரு போட்டியில் முன்னணி அணிகள் சற்று திணறுவது வழக்கம். ஆனால் தற்போது தான் 3 சுற்றுகள் முடிந்துள்ளன. ஒலிம்பியாடில் தொடக்கத்தில் தோல்வியைத் தழுவிய அணிகள் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளன’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com