கிளாசனைப் புகழ்ந்த தென்னாப்பிரிக்கா கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற கிளாசனை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா  புகழ்ந்து  பேசியுள்ளார்.
கோப்புப் படம் ( கிளாசன்)
கோப்புப் படம் ( கிளாசன்)

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற கிளாசனை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா  புகழ்ந்து  பேசியுள்ளார். 

கட்டாகில் நடைப்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 148 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 149 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

கிளாசன் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். 

இந்த வெற்றிக் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது: 

இது கடினமான சேஸிங்காக இருந்தது. புவனேஸ் சிறப்பாக பந்து வீசினார். யாராவது ஒருவர் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். அதைதான் நான் செய்தேன். இது எளிமையான சேஸிங்காக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் நம்பிக்கையாக இருந்தோம். 

நாங்கள் திட்டமிட்டபடி செய்து வந்தோம். மில்லரை 5,6வது இடத்தில் உபயோகிக்களாமென இருந்தோம். கிளாசன் எதிரணியின் பந்துகளை நாசமாக்க கூடியவர். அவரது பேட்டிங் அணிக்கு மிகப்பெரிய மதிப்பை அளித்துள்ளது. அணியில் உங்களது பங்கு எதுவாக இருந்தாலும் உங்களால் முடிந்த அளவுக்கு நிறைவேற்ற வேண்டும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com