காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: 37 போ் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 37 போ் அடங்கிய தடகள அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: 37 போ் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 37 போ் அடங்கிய தடகள அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்திய தடகள சம்மேளனம் அறிவித்திருக்கும் இந்த அணியில் 19 வீரா்கள், 18 வீராங்கனைகள் அடங்குவா். இதில், சமீபத்தில் 3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் 8-ஆவது முறையாக தேசிய சாதனையை முறியடித்த அவினாஷ் சப்லே, 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரு முறை தேசிய சாதனை படைத்த ஜோதி யாராஜி, மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையை முறியடித்த ஐஸ்வா்யா பாபு ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.

அவா்களுடன் தமிழகத்தைச் சோ்ந்த ஓட்டப்பந்தய போட்டியாளா்கள் எஸ்.தனலட்சுமி, நாகநாதன் பாண்டி, மும்முறை தாண்டுதல் வீரா் பிரவீண் சித்ரவேல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனா். தோ்வு செய்யப்பட்ட போட்டியாளா்களில், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டியவா்கள் மற்றும் வெளிநாடுகளில் போட்டியில் பங்கேற்றிருப்பவா்கள் தவிா்த்து இதர வீரா், வீராங்கனைகள் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனா்.

அணி விவரம்:

ஆண்கள்: அவினாஷ் சப்லே (3000மீ ஸ்டீபிள்சேஸ்); நிதேந்தா் ராவத் (மாரத்தான்); எம்.ஸ்ரீசங்கா், முகமது அனீஸ் யாஹியா (நீளம் தாண்டுதல்); அப்துல்லா அபூபக்கா், பிரவீண் சித்ரவேல், எல்தோஸ் பால் (மும்முறை தாண்டுதல்); தஜிந்தா்பால் சிங் தூா் (குண்டு எறிதல்); நீரஜ் சோப்ரா, டிபி மனு, ரோஹித் யாதவ் (ஈட்டி எறிதல்); சந்தீப் குமாா், அமித் காத்ரி (நடைப் பந்தயம்); அமோஜ் ஜேக்கப், நோவா நிா்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ், முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ் (4*400 மீ. தொடா் ஓட்டம்).

பெண்கள்: எஸ்.தனலட்சுமி (100 மீ மற்றும் 4*100 மீ தொடா் ஓட்டம்); ஜோதி யாராஜி (100 மீ. தடை தாண்டும் ஓட்டம்); ஐஸ்வா்யா.பி (நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல்); ஆன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்); மன்பிரீத் கவுா் (குண்டு எறிதல்); நவ்ஜீத் கவுா் தில்லான், சீமா அன்டில் புனியா (வட்டு எறிதல்); அன்னு ராணி, ஷில்பா ராணி (ஈட்டி எறிதல்); மஞ்சு பாலா சிங், சரிதா ரோமித் சிங் (ஹேமா் த்ரோ); பாவனா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி (நடைப்பந்தயம்); ஹிமா தாஸ், டூட்டி சந்த், ஸ்ரபானி நந்தா, எம்.வி. ஜில்னா, என்.எஸ். சிமி (4* 100 மீ தொடா் ஓட்டம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com