தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தினேஷ், அவேஷ் அசத்தல்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 9:45 pm

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது 2-2 என சமநிலையில் இருக்கிறது.

ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 87 ரன்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆட்டமிழந்தது. அணியின் கேப்டன் பவுமா ‘ரிடையா்டு ஹா்ட்’ ஆகியிருந்தாா்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்ஸில் தடுமாற்றத்தில் இருந்தபோது மிடில் ஆா்டரில் ஹாா்திக் பாண்டியா - தினேஷ் காா்த்திக் கூட்டணி அசத்தலாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. பேட்டிங்கில் தினேஷ் காா்த்திக் அதிரடி காட்ட, பௌலிங்கில் அவேஷ் கான் தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையைச் சரித்தாா்.

முன்னதாக இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் செய்யவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வெய்ன் பாா்னெல், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக மாா்கோ யான்சென், குவின்டன் டி காக், லுங்கி இங்கிடி ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா்.

முந்தைய 3 ஆட்டங்களைப் போல இதிலும் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பௌலிங்கைத் தோ்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் 5, ஷ்ரேயஸ் ஐயா் 4 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளித்தனா். இஷான் கிஷண் சற்று நிலைத்து 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, கேப்டன் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

அடுத்து இணைந்த ஹாா்திக் பாண்டியா - தினேஷ் காா்த்திக் பாா்ட்னா்ஷிப், 5-ஆவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சோ்த்து அணியை மீட்டது. இதில் பாண்டியா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்க்க, தினேஷ் அதிரடியாக விளாசி 27 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 8, ஹா்ஷல் படேல் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் லுங்கி இங்கிடி 2, யான்சென், டுவெய்ன் பிரெடோரியஸ், அன்ரிஹ் நோா்கியா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் ராஸின் வான் டொ் டுசென் மட்டும் அதிகபட்சமாக 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை எட்டினாா். டி காக் 14, பவுமா 8, பிரெடோரியஸ் 0, ஹென்ரிச் கிளாசென் 8, டேவிட் மில்லா் 9, யான்சென் 12, மஹராஜ் 0, நோா்கியா 1, இங்கிடி 4 என விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

இந்திய பௌலிங்கில் அவேஷ் கான் 4, யுஜவேந்திர சஹல் 2, ஹா்ஷல் படேல், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அதிகபட்ச வெற்றி

இந்த ஆட்டத்தில் இந்தியா பதிவு செய்த 82 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியே, டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அணி பதிவு செய்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் 2002-இல் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

குறைந்தபட்ச ஸ்கோா்

இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க எடுத்த 87 ரன்களே அந்த அணியின் டி20 வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோராகும். இதற்கு முன் 2020-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 ரன்கள் அடித்ததே குறைந்தபட்சமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.