‘உலக கோப்பை அணிக்கு அனுபவமுள்ள வீரர்கள் தேவை’- இர்பான் பதான் தேர்ந்தெடுத்த அணியில் ரிஷப் பந்துக்கு இடமில்லையா?

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தேர்ந்தெடுத்த டி20 உலக கோப்பை அணியில் ரிஷப் பந்த் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தென்னாப்பிரிகாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிஷப் பந்தின் மோசமான பேட்டிங் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியிருப்பதாவது: 

ஆஸ்திரேலியாவில் பொதுவாக பந்து வேகமாகவும் ஸ்விங் ஆகியும் வருவதால் வலுவான தொடக்கம் தேவை. இதற்கு உங்களுக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. கோலி இப்போது சரியாக விளையாடாவிட்டாலும் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார். 

இர்பான் பதான் தேர்ந்தெடுத்த டி20 உலக கோப்பைக்கான 11பேர் கொண்ட அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com