
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பவர்பிளேவில் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் எடுத்து 16 ரன்களை கொடுத்தார். இதன் மூலம் தனது 34வது விக்கெட்டை எடுத்து டி20 போட்டிகளில் (பவர்பிளே) அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் எனற சாதனையைப் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் (பவர்பிளே) அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் :
1. புவனேஷ்வர் குமார் (இந்தியா) 34
2. சாமுவேல் பத்ரி (மே.இ.தீவுகள்) 33
3.டிம் சவுத்தி (நியூசிலாந்து) 33
4. ஷகிப் அல் ஹாசன் (வங்காள தேசம்) 27
5. ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸ்திரேலியா) 26
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.