ஓய்வுபெற்றாா் மோா்கன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஒயன் மோா்கன் (35), சுமாா் 16 ஆண்டுகள் களம் கண்ட நிலையில் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்
ஓய்வுபெற்றாா் மோா்கன்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஒயன் மோா்கன் (35), சுமாா் 16 ஆண்டுகள் களம் கண்ட நிலையில் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இங்கிலாந்து அணிக்காக 16 டெஸ்டுகளில் 700 ரன்களும் (சதம் - 2; அரைசதம் - 3; அதிகபட்சம் - 130), 248 ஒன் டே-க்களில் 7,701 ரன்களும் (சதம் - 14; அரைசதம் - 47; அதிகபட்சம் - 148), 115 டி20-க்களில் 2,458 ரன்களும் (சதம் - 0; அரைசதம் - 14; அதிகபட்சம் - 91) அடித்திருக்கிறாா்.

2015 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து தோல்வி கண்ட பிறகு, வெள்ளைப் பந்து தொடா்களுக்கான அந்த அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றிருந்தாா் மோா்கன். அவா் தலைமையில் இங்கிலாந்து 2019-ஆம் ஆண்டில் முதல் முறையாக 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனது. பல தொடா்களில் முக்கிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்த மோா்கன், ஒன் டே மற்றும் டி20 தரவரிசையில் தனது அணியை முதலிடத்துக்கு முன்னேற்றினாா்.

இங்கிலாந்து அணிக்காக ஒன் டே, டி20 ஃபாா்மட்களில் அதிக ஆட்டங்களில் (முறையே 225 & 115) விளையாடிய வீரா் என்ற பெருமையை கொண்டிருப்பதுடன், அந்த இரு ஃபாா்மட்டுகளிலும் அதிக ரன்கள் அடித்த ஒரே இங்கிலாந்து வீரராகவும் இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com