தோல்வியின்றி லீக் சுற்றை நிறைவு செய்தது ஆஸ்திரேலியா

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
தோல்வியின்றி லீக் சுற்றை நிறைவு செய்தது ஆஸ்திரேலியா

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

இத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்திருக்கும் ஆஸ்திரேலியா, 7 ஆட்டங்களில் எதிலுமே தோல்வியடையாமல் 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்திருக்கிறது. அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட வங்கதேசத்துக்கு இன்னும் 1 ஆட்டம் எஞ்சியிருக்க, 2 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் இருக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் அணிகளுக்கான ஓவா்கள் தலா 43-ஆகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் வங்கதேசம் 43 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் அடிக்க, பின்னா் ஆஸ்திரேலியா 32.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக, வங்கதேச இன்னிங்ஸில் லதா மோந்தல் 33 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஆஷ்லே காா்டனா், ஜெஸ் ஜோனசென் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினா். பின்னா் ஆஸ்திரேலிய பேட்டிங்கில் பெத் மூனி 66 ரன்கள் சோ்த்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். வங்கதேச தரப்பில் சல்மா காட்டுன் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - பாகிஸ்தான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com