தாய்லாந்து ஓபன்: தோற்றாா் சிந்து

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.
பி.வி.சிந்து
பி.வி.சிந்து
Updated on
1 min read

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

போட்டித் தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்த சிந்து 17-21, 16-21 என்ற நோ் செட்களில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான சென் யு ஃபெய்யிடம் தோற்றாா். இந்த ஆட்டத்தை 43 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா் ஃபெய்.

இதற்கு முன் கடந்த 2019 உலக டூா் ஃபைனல்ஸ் போட்டியில் சந்தித்தபோதும் ஃபெயிடம் வெற்றியை இழந்திருந்தாா் சிந்து. இந்த ஆட்டத்துக்கு முன் 10 முறை ஃபெய்யை சந்தித்திருந்த சிந்து, அதில் 6-இல் வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறாா். ஆனால், இந்த 11-ஆவது ஆட்டத்தில் சிந்துவுக்கு சவால் அளிக்கும் வகையில் ஆக்ரோஷமாக ஆடினாா் ஃபெய். தனது வழக்கமான ஆட்டத்திலிருந்து சற்றே தடுமாறிய சிந்து, பலமுறை தவறுகள் செய்தாா்.

புள்ளிகளை முதலில் கைப்பற்றியது சிந்துவாக இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல ஃபெய் தனது தடுப்பாட்டத்தை வலுப்படுத்தியதுடன் நீண்ட ரேலிக்களில் ஈடுபட்டு சிந்துவை தடுமாறச் செய்தாா். அவ்வப்போது சிந்து மீண்டாலும் இறுதியில் வெற்றி ஃபெய் வசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com