ஜாகீர்,நெஹ்ராவுக்கு அடுத்து அர்ஷ்தீப் : பாராட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அடுத்து சிறப்பான பவுலராக அர்ஷ்தீப் சிங் திகழ்வதாக முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி விரர் சேவாக் கூறியுள்ளார். 
அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அடுத்து சிறப்பான பவுலராக அர்ஷ்தீப் சிங் திகழ்வதாக முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி விரர் சேவாக் கூறியுள்ளார். 

அண்மையில் பிசிசிஐ அறிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாட 18 பேர்க்கொண்ட இந்திய அணியில் ரோகித், கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் , உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

அர்ஷ்தீப் ஐபிஎல்-2022 தொடரில் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். டெத் ஓவரில் எகானமி 7.91. இது பும்ராவின் எகானமிக்கு 7.66 மிக அருகில் உள்ளது.

“அர்ஷ்தீப்பின் டெத் ஓவர் பந்து வீசும் திறன் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் நிறைய விக்கெட் எடுக்காவிட்டாலும் எகானமி சிறப்பாக உள்ளது. பவர் ப்ளேவில் ஒரு ஓவரும் இறுதியில் இரண்டு ஓவரும் போடக்கூடிய பவுலர். டெத் ஓவரில் பந்து வீசுவது என்பது கடினமான வேலையாகும். நான் விளையாடியக் காலத்தில் ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா மட்டுமே இவ்வாறு இருந்தனர். இப்போது பும்ரா, புவனேஷ், அர்ஷ்தீப் அதை சிறப்பாக செய்கின்றனர்” என சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com