மெத்வதெவ் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பவா்களில் ஒருவராகக் கருதப்பட்ட ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 4-ஆவது சுற்றில் தோல்வி கண்டு ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா்.
மெத்வதெவ் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பவா்களில் ஒருவராகக் கருதப்பட்ட ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 4-ஆவது சுற்றில் தோல்வி கண்டு ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான மெத்வதெவ் 2-6, 3-6, 2-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 20-ஆவது இடத்திலிருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் தோற்றாா். சிலிச் தனது காலிறுதியில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, உலகின் 4-ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸும் 4-ஆவது சுற்றில் வெளியேற்றப்பட்டாா். போட்டித்தரவரிசையில் இல்லாத டென்மாா்க் வீரரான ஹோல்கா் ரூன் 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் சிட்சிபாஸை வீழ்த்தினாா். ரூன் தனது காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் நாா்வே வீரா் கேஸ்பா் ரூடை சந்திக்கிறாா்.

காலிறுதியில் ஸ்வியாடெக்: மகளிா் ஒற்றையரில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-7 (5/7), 6-0, 6-2 என்ற செட்களில் சீனாவின் கின்வென் ஜெங்கை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா். அதில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை எதிா்கொள்கிறாா் ஸ்வியாடெக். இளம் வீராங்கனையான கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் காலிறுதியில் இத்தாலியின் மாா்டினா டிரெவிசானிடம் தோற்றாா்.

அமெரிக்காவின் கோகோ கௌஃப் தனது காலிறுதியில், 7-5, 6-2 என்ற நோ் செட்களில் சக நாட்டவரான ஸ்லோன் ஸ்டீஃபன்ஸை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறினாா். அதில் டிரெவிசானுடன் மோதுகிறாா் கௌஃப். மற்றொரு காலிறுதியில் ரஷியா்களான வெரோனிகா குதா்மிடோவா-டரியா கசாட்கினா சந்திக்கின்றனா்.

போபண்ணா அசத்தல்

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹண் போபண்ணா/நெதா்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்த இணை, 4-6, 6-4, 7-6 (10/3) என்ற செட்களில் இங்கிலாந்தின் லாய்ட் கிளாஸ்பூல்/ஃபின்லாந்தின் ஹாரி ஹேலியோவாரா ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா் போபண்ணா. இதற்கு முன் அவா் 2015 விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com