மனிகா பத்ரா
மனிகா பத்ரா

டேபிள் டென்னிஸ்: முதல்முறை அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில், முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். 


தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில், முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். 

தாய்லாந்தின் பாங்காங் நகரில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் இன்றுமுதல் (நவ.18) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, சீன தைபேயின் சென் சூ யு என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தைபேவைச் சேர்ந்த சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் மனிகா பத்ரா வீழ்த்தினார். இதற்கு முந்தைய போட்டியில் உலகின் 7ஆம் நிலை வீராங்கனையான சீனாவைச் சேர்ந்த ஸிங்கோங் யாவ்-வை வீழ்த்தினார்.

மணிகா பத்ரா 8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதியடைந்தார். இதன் மூலம் ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றார்.

அரையிறுதிப்போட்டியில், கொரியாவின் ஜியோன் ஜியி, ஜப்பானின் மீமா இடோ ஆகிய வீராங்கனைகளை மனிகா பத்ரா எதிர்கொள்ளவுள்ளார். 

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல்முறை இந்தியா சார்பில் அரையிறுதிக்குள் நுழைந்த மனிகா பத்ராவிற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com