சாய் கிஷோர்
சாய் கிஷோர்

விஜய் ஹசாரே காலிறுதி: தமிழக அணி தோல்வி!

விஜய் ஹசாரே காலிறுதியில் தமிழகத்தை செளராஷ்டிர அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
Published on

விஜய் ஹசாரே காலிறுதியில் தமிழகத்தை செளராஷ்டிர அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 28-வது ஓவரில் 131 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது செளராஷ்டிரம். ஹர்விக் தேசாய் 61, அர்பித் 51, சிராஜ் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து செளராஷ்டிர அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்கள். செளராஷ்டிர அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணியில் எம். முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தமிழக அணி 48 ஓவர்களில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஜெகதீசன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாபா இந்திரஜித் 53, சாய் கிஷோர் 74 ரன்கள் எடுத்தார்கள். சிராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com