

விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தின் தான் நாயகனாக நடிக்கவில்லை என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்தர நடிகராகவும் பிசியாக இருப்பவர் நடிகர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என உச்சநட்சத்திரங்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘தாதா’ படத்தின் புரோமோஷன்களில் யோகிபாபுவை நாயகனாக சித்தரித்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க: துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!
அதனைப் பகிர்ந்த யோகிபாபு “இந்தப் படத்தில் நான் நாயகனாக நடிக்கவில்லை. நிதின் சத்யாதான் ஹீரோ. நான் அவரின் நண்பராக நடித்திருக்கிறேன். நான் ஹீரோ இல்லை. நம்பாதீங்க மக்களே” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.