சிறந்த ஆட்ட நாயகன் விருது கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது ஏன்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா. முதல் இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 
சிறந்த ஆட்ட நாயகன் விருது கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது ஏன்?


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா. முதல் இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

குவாஹாட்டியில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி அமர்க்களமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 57, ரோஹித் சர்மா 43, சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கோலி 49 ரன்களும் தினேஷ் கார்த்திக் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் 10 ஓவர்களுக்குப் பிறகு அதிரடியாக விளையாடியது. எனினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்றது. குயிண்டன் டி காக் 69, மில்லர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

ஆட்ட நாயகன் விருது கே. எல் ராகுலுக்கு வழங்கப்பட்டபோது அனைவரும் ஆச்சர்யமடைந்தார்கள். சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எடுக்க பெரிதும் உதவினார். மில்லர் அற்புதமாக விளையாடி சதமெடுத்தார். இவ்விருவரில் ஒருவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கே.எல். ராகுல் அந்த விருதுக்குத் தேர்வானார்.

பரிசளிப்பு விழால் கே.எல். ராகுல் பேசியதாவது:

சிறந்த ஆட்ட நாயகன் விருது எனக்கு வழங்கப்பட்டதில் ஆச்சர்யப்படுகிறேன். சூர்யகுமார் யாதவ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆட்டத்தின் அவர் போக்கை மாற்றினார் என்றார். இதற்கு நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த ஹர்ஷா போக்ளே கூறியதாவது: நான் சொல்கிறேன், உங்களுக்கு ஏன் வழங்கப்படுகிறது என. வர்ணனைக் குழுவில் இருந்த மூத்த தொடக்க வீரர், ராகுலின் பணி தான் கடினமானது என்றார் என விளக்கம் அளித்தார். இதற்குப் பதிலளித்த ராகுல், தொடக்க வீரர்கள், நம் வேலை தான் கடினமானது என எண்ணுவோம். ஒருநாள் கிரிக்கெட்டில் நடுவரிசை வீரராக விளையாடியதில் சொல்கிறேன், அந்தப் பொறுப்பும் கடினமானது தான். எனவே சூர்யகுமார் ஆட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com