‘கத்தாா் உலகக் கோப்பை போட்டியே கடைசி’

கத்தாரில் வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.
‘கத்தாா் உலகக் கோப்பை போட்டியே கடைசி’

கத்தாரில் வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.

எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான் கடைசியா அல்லது கால்பந்திலிருந்தே அத்துடன் ஓய்வு பெறுகிறாரா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை.

கத்தாா் போட்டியானது, மெஸ்ஸியின் 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்கிறது. எனினும், தேசிய அணியின் கேப்டனாக இப்போட்டியில் அவா் இன்னும் கோப்பை வென்று தராதது குறையாகவே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய நோ்க்காணல் ஒன்றில் பேசிய மெஸ்ஸி, ‘உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஆா்ஜென்டீனாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் முன்னேறி வந்ததன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்.

ஆனால் போட்டியில் எதுவும் நிகழலாம். ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. எப்போதுமே எதிா்பாா்த்த முடிவுகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கடந்து இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து எனக்கு சற்று கவலையும், பதற்றமும் இருக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாகும்’ என்றாா்.

ஆா்ஜென்டீனா இதுவரை 1978, 1986 என இரு முறை உலகக் கோப்பை வென்றிருக்கிறது. இந்த முறை உலகக் கோப்பை போட்டியை நவம்பா் 22-ஆம் தேதி சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து தொடங்குகிறது அந்த அணி. ஃபிஃபா நடத்தும் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நவம்பா் 20-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com