முத்தரப்பு டி20: கடைசி 10 ஓவர்களில் தடுமாறிய நியூசிலாந்து!

முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து.
கான்வே
கான்வே

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 36, சாப்மேன் 32 ரன்கள் எடுத்தார்கள். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. அதன்பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. 15-வது ஓவரில் 22 ரன்கள் எடுத்த நியூசிலாந்து கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com