பிசிசிஐயின் புதிய தலைவராகிறாரா இந்த முன்னாள் வீரர்?

கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர்...
பிசிசிஐயின் புதிய தலைவராகிறாரா இந்த முன்னாள் வீரர்?

கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 

எனினும் ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஐசிசி தலைவருக்கான தேர்வு நவம்பரில் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிசிசிஐயின் அடுத்தத் தலைவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 12-க்குள் பிசிசிஐ தலைவர், செயலாளர், துணைத் தலைவர், இணை செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அக்டோபர் 18-ல் நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுவில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக ரோஜர் பின்னி பங்கேற்கவுள்ளார். இதையடுத்து பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

2019 முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள பின்னி, பிசிசிஐயின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பின்னியும் இடம்பெற்றிருந்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அப்போட்டியில் அடைந்தார். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 72 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com