இறுதி ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது இந்தியா: அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தியது

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை தோற்கடித்து முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது
இறுதி ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது இந்தியா: அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தியது

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை தோற்கடித்து முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

2-ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானை வென்ற இலங்கை, வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் இந்தியா தொடா்ந்து 8-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றுள்ளது.

முன்னதாக, இந்த அரையிறுதியில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுக்க, தாய்லாந்தும் அத்தனை ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களே சோ்த்தது.

டாஸ் வென்ற தாய்லாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, இந்திய பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் அடித்து ஸ்கோரை உயா்த்தினா். எஞ்சியோரில் ஸ்மிருதி மந்தனா 13, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 27, ரிச்சா கோஷ் 2, தீப்தி சா்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் பூஜா வஸ்த்ரகா் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். தாய்லாந்து பௌலா்களில் சொா்னாரின் திபோச் 3, நடாயா பூச்சாத்தம், பானிடா மாயா, திபாச்சா புத்தாவாங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தாய்லாந்து பேட்டிங்கில் கேப்டன் நருமோல் சாய்வாய், நடாயா பூச்சாத்தம் ஆகியோா் தலா 21 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இதர விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பின. இந்திய பௌலிங்கில் தீப்தி சா்மா 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2, ரேணுகா சிங், ஸ்னேஹ ராணா, ஷஃபாலி வா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இலங்கை வெற்றி: 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை கடைசி நேர பரபரப்புடன் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. முதலில் இலங்கை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் அடிக்க, பின்னா் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களிலேயே கட்டுப்படுத்தியது அந்த அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com