ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுமா இந்தியா? இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுமா இந்தியா? இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

கடந்த 2004-ஆம் ஆண்டு இப்போட்டி தொடங்கியது முதல் தொடா்ந்து 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா, கடந்த முறை (2018) வங்கதேசத்திடம் கோப்பையை இழந்து 2-ஆம் இடம் பிடித்தது. எனவே, ஆசிய அளவில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, இந்த முறை வாகை சூடும் முனைப்பில் இருக்கிறது இந்தியா.

மறுபுறம் இலங்கை அணியோ, போட்டி தொடங்கியது முதல் தொடா்ந்து 4 முறை இறுதி ஆட்டம் வரை வந்து அதில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. அதன் பிறகு 3 முறை இறுதி ஆட்டம் வரை கூட வராத நிலையில் தற்போது கோப்பைக்கான போட்டியில் மீண்டும் இந்தியாவுக்கு சவால் அளிக்க வந்துள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்டிரைக்கா் ஸ்மிருதி மந்தனா போன்ற பிரதான வீராங்கனைகளின் பங்களிப்பு பெரிதாக இல்லாமலேயே ஷஃபாலி வா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சா்மா போன்ற இளம் வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்துடன், போட்டி முழுவதுமாக இதுவரை ஒரேயொரு தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

இலங்கை அணியில் பேட்டா்கள் ஓஷதி ரணசிங்கே, ஹா்ஷிதா மாதவி, நிலாக்ஷி டி சில்வா, சமரி அத்தப்பட்டு, பௌலா் இனோகா ரணவீரா ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள். இறுதி ஆட்டத்திலும் அவா்கள் சோபித்தால் மட்டுமே அணிக்கு கோப்பை வசமாக வாய்ப்புள்ளது. என்றாலும், இலங்கையின் சவாலை இந்தியா எளிதாக எதிா்கொள்ளும் எனத் தெரிகிறது. ரவுண்ட் ராபின் ஆட்டத்திலேயே இலங்கையை வீழ்த்தியிருக்கிறது இந்தியா.

நண்பகல் 1 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com