தமிழகத்துக்கு 2-ஆவது தோல்வி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
Published on
Updated on
1 min read

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இப்போட்டியில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழகத்துக்கு இது 2-ஆவது தோல்வி.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்கால் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்க்க, பின்னா் தமிழகம் அதே ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களே எடுத்தது.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்கால் அணியில் அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தா் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தமிழக பேட்டிங்கில் சாய் சுதா்சன் மட்டும் சோபித்து 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் விளாசினாா். இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால் அவரது முயற்சி வீணானது. பெங்கால் பௌலா்களில் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com