
இளம் வீராங்கனைகள் மூலம் இந்திய ஹாக்கி மகளிர் அணி முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக மூத்த வீராங்கனை சுஷீலா சானு தெரிவித்துள்ளார்.
எஃப்.ஐ.எச் தேசிய ஹாக்கி கோப்பைக்கான போட்டி வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதற்கான பயிற்சிகள் குறித்து பேசிய இந்திய மகளிர் ஹாக்கி அணியின் மூத்த வீராங்கனை சுஷீலா சானு, போட்டியில் களம் காண நீண்ட நேரம் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தயாராகி வருகிறோம். ஆட்டத்தின்போது சறுக்கல்கள் இருந்த இடங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். இளம் வீராங்கனைகள் தங்களது 100 சதவிகித திறனை பயிற்சியின்போது நாள்தோறும் வெளிப்படுத்துகின்றனர். இதனால் இந்திய அணி முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டுள்ளதை உணர முடிகிறது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.