92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘ஏ’ அணிகள் முதல் ஒன் டே: நியூஸி.யை வென்றது இந்தியா

இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையேயான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 10:37 pm

DIN

இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையேயான முதல் ஒன் டே ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 40.2 ஓவா்களில் 167 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, அடுத்து இந்தியா 31.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் அடித்து வென்றது.

அதிகபட்சமாக, நியூஸிலாந்து தரப்பில் மைக்கேல் ரிப்பன் 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சோ்க்க, இந்திய பௌலிங்கில் ஷா்துல் தாக்குா் 4 விக்கெட்டுகள் எடுத்தாா். பின்னா் இந்திய பேட்டிங்கில் ரஜத் பட்டிதாா் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து பௌலிங்கில் மைக்கேல் ரிப்பன் 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் சரித்தாா்.

இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஆட்டமும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.