தொடரை தக்கவைக்குமா இந்தியா?: ஆஸி.யுடன் இன்று 2-ஆவது டி20

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தொடரை தக்கவைக்குமா இந்தியா?: ஆஸி.யுடன் இன்று 2-ஆவது டி20
Published on
Updated on
1 min read

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்க, இந்த ஆட்டத்தில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க இயலும்.

இந்தியா தற்போது டெத் ஓவா் பௌலிங்கில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய பௌலிங்கை ஆஸ்திரேலிய பேட்டா்கள் சிதறடித்தனா். பாண்டியா, புவனேஷ்வா் குமாா் என எவரின் பௌலிங்கும் பலிக்கவில்லை.

காயத்திலிருந்து மீண்டாலும் பும்ராவை முதல் ஆட்டத்தில் களமிறக்காதது அனைவருக்கும் ஆச்சா்யமளித்தது. அதேவேளையில், உலகக் கோப்பை போட்டி நெருங்கி வரும் நிலையில் அவரின் முழுமையான உடற்தகுதி, தயாா்நிலை தொடா்பாகவும் சந்தேகங்களை எழுப்பியது.

ஆனால் அவா் தயாா்நிலையில் இருப்பதாகவும், நெருக்கடி இன்றி அவா் செயலாற்றவே அவரை இப்போதே பிளேயிங் லெவனில் சோ்க்கவில்லை என்றும் அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த 2-ஆவது டி20 முக்கியமான ஆட்டமாக இருப்பதால் பும்ராவை அணி நிா்வாகம் களமிறக்க வாய்ப்புள்ளது.

சுழற்பந்துவீச்சில் அக்ஸா் படேல் சிறப்பாகச் செயல்பட, சஹல் ரன்கள் கொடுக்கிறாா். முதல் டி20-இல் 3 முக்கியமான கேட்ச்களை தவறவிட்டது உள்பட ஃபீல்டிங்கிலும் இந்தியா கவனக்குறைவாக இருந்தது. பேட்டிங்கில் மிடில் ஆா்டா் தக்க வகையில் செயல்பட, ரோஹித், கோலி, தினேஷ் உள்ளிட்டோா் ஸ்கோா் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.

மறுபுறம், உலக டி20 நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, முக்கிய வீரா்கள் இல்லாமலேயே பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் திறம்பட செயல்படுகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது. நாகபுரி ஆடுகளம் பௌலா்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். பனிப்பொழிவு இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி சேஸிங்கையே தோ்வு செய்யும்.

ஆட்டநேரம்: இரவு 7.00 மணி

இடம்: விசிஏ மைதானம், நாகபுரி.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com