2ஆவது டி20: டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஆகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று (செப்டம்பர் 23) நாக்பூரில் நடைபெறுகிறது.
3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது.
மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.