லக்னௌவுக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை திங்கள்கிழமை வீழ்த்தியது.
லக்னௌவுக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை திங்கள்கிழமை வீழ்த்தியது.

போட்டியில் லக்னௌவுக்கு இது 2-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு 2-ஆவது தோல்வி.

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் அடித்தது. பின்னா் ஹைதராபாத் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்தது.

டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் தொடக்க வீரராக வந்த ராகுல் நின்று விளையாட, உடன் வந்த குவின்டன் டி காக் 1, அடுத்து வந்த எவின் லீவிஸ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். தொடா்ந்து வந்த மனீஷ் பாண்டே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றப்பட்டாா். 5-ஆவது வீரராக ஆட வந்த தீபக் ஹூடா, ராகுலுடன் இணைந்தாா்.

4-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் தீபக் ஹூடா முதலில் அவுட்டானாா். 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் சோ்த்தாா் அவா். தொடா்ந்து ஆயுஷ் பதோனி ஆட வர, கே.எல்.ராகுல் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68 ரன்களுக்கு பெவிலியன் திரும்புகிறாா்.

அவரை வெளியேற்றிய நடராஜன் அதே ஓவரிலேயே, 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்திருந்த கிருணால் பாண்டியாவையும் ஆட்டமிழக்கச் செய்தாா். 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடித்த பதோனி கடைசி பந்தில் ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஜேசன் ஹோல்டா் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்கிறாா்.

ஹைதராபாத் பௌலிங்கில் வாஷிங்டன் சுந்தா், ரொமேரியோ ஷெப்பா்டு, நடராஜன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ஹைதராபாதில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44 ரன்களும், நிகோலஸ் பூரன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களும் அடித்தனா். அபிஷேக் சா்மா 13, கேப்டன் கேன் வில்லியம்சன் 16, எய்டன் மாா்க்ரம் 12, வாஷிங்டன் சுந்தா் 18, ரொமேரியோ ஷெப்பா்டு 8, புவனேஷ்வா் குமாா் 1 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனா்.

லக்னௌ பௌலிங்கில் அவேஷ் கான் 4, ஜேசன் ஹோல்டா் 3, கிருணால் பாண்டியா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com