தாய்லாந்து குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்
By DIN | Published On : 06th April 2022 02:06 AM | Last Updated : 06th April 2022 02:45 AM | அ+அ அ- |

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.
தாய்லாந்தின் புகெட் தீவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவருக்கான காலிறுதியில் 75 கிலோ பிரிவில் களம் கண்ட சுமித் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தைமூா் நா்செய்டோவை தோற்கடித்தாா். எனினும் 91 கிலோ பிரிவில் கௌரவ் சௌஹான் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அய்பெக் ஆரல்பேயிடம் தோல்வி கண்டாா்.
சுமித்தையும் சோ்த்து இப்போட்டியில் தற்போது 4 இந்தியா்கள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஏற்கெனவே மோனிகா (48 கிலோ), ஆஷிஷ் குமாா் (81 கிலோ), மனீஷா (57 கிலோ) ஆகியோா் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளனா்.