முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை

நவி மும்பை, ஏப். 12: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. போட்டியில் சென்னைக்கு இது முதல் வெற்றியாகும். 
முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை

நவி மும்பை, ஏப். 12: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. போட்டியில் சென்னைக்கு இது முதல் வெற்றியாகும். 

முதலில் சென்னை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. அடுத்து பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எட்டியது. 

இந்த ஆட்டத்தில் சென்னையின் பேட்டிங்கில் ராபின் உத்தப்பா, ஷிவம் துபே அதிரடியாக ஆட, பெüலிங்கில் மஹீஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அசத்தல் காட்டினர். பெங்களூர் பேட்டிங்கில் வழக்கம்போல் தினேஷ் கார்த்திக் விளாசினாலும், இந்த முறை அதற்கு பலன் கிடைக்காமல் போனது. 

முன்னதாக ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் சென்னை மாற்றம் செய்யவில்லை. பெங்களூரில் ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி ஆகியோருக்குப் பதிலாக சுயாஷ் பிரபுதேசாய், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற பெங்களூர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 
சென்னை இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 3 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டார். 

தொடர்ந்து களம் புகுந்த ஷிவம் துபே, உத்தப்பாவுடன் இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 3}ஆவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பில் முதலில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 88 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

தொடர்ந்து வந்த கேப்டன் ரவீந்திர ஜடேஜா, அதே வேகத்தில் ஆட்டமிழந்தார். பின்னர் தோனி களம் புகுந்தாலும், ஸ்டிரைக்கிங் எண்டில் ஷிவம் துபே நிலைத்தார். ஓவர்கள் முடிவில் அவர் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 95 ரன்களுக்கும், தோனி ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பெüலிங்கில் வனிந்து ஹசரங்கா 2, ஜோஸ் ஹேஸில்வுட் 1 விக்கெட் எடுத்தனர். 

பின்னர் ஆடிய பெங்களூரில் ஷாபாஸ் அகமது 4 பவுண்டரிகளுடன் 41, சுயாஷ் பிரபுதேசாய் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் விளாசினர். 

கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 26, முகமது சிராஜ் 14, அனுஜ் ராவத் 12 ரன்கள் அடிக்க, எஞ்சி விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. சென்னை பெüலிங்கில் தீக்ஷனா 4, ஜடேஜா 3, முகேஷ் செüதரி, டுவெய்ன் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.


புள்ளிகள் பட்டியல்


(சென்னை}பெங்களூர் ஆட்டம் (22) வரை)

ராஜஸ்தான்    4    3    1    6
கொல்கத்தா    5    3    2    6
லக்னௌ    5    3    2    6
குஜராத்    4    3    1    6
பெங்களூர்    5    3    2    6
டெல்லி    4    2    2    4
பஞ்சாப்    4    2    2    4
ஹைதராபாத்    4    2    2    4
சென்னை    5    1    4    2
மும்பை    4    0    4    0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com