பெங்களூருவில் நடைபெறவுள்ள ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள்

ஐபிஎல் 2022 போட்டி முடிந்தபிறகு ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெறவுள்ளன.
பெங்களூருவில் நடைபெறவுள்ள ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள்

ஐபிஎல் 2022 போட்டி முடிந்தபிறகு ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெறவுள்ளன. 

கரோனா சூழல் காரணமாக, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்தப் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் முதலில் அத்தகைய சூழலை எதிா்கொண்டபோதும், போட்டியை 2 பகுதிகளாகப் பிரித்து நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.  ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியின் லீக் சுற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஓர் ஆட்டமும் நடைபெற்றன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு ஜூன் 4 முதல் ரஞ்சி கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் பெங்களூரில் நடைபெறவுள்ளன. ஐபிஎல்-லில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கரோனா தடுப்பு வளையத்துக்குள் இருக்கவேண்டும்.

காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 12 முதல் 16 வரையும் இறுதிச்சுற்று ஆட்டம் ஜூன் 20 முதல் 24 வரையும் நடைபெறவுள்ளன. 

பெங்களூருவில் ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள்

காலிறுதி: ஜூன் 4 முதல் 8 வரை

பெங்கால் - ஜார்க்கண்ட்
மும்பை - உத்தரகண்ட்
கர்நாடகம் - உத்தரப் பிரதேசம்
பஞ்சாப் - மத்தியப் பிரதேசம்

அரையிறுதி: ஜூன் 12 முதல் 16 வரை

இறுதிச்சுற்று: ஜூன் 20 முதல் 24 வரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com