தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

டிஎன்பிஎல் 2022: ஜூன் 23-இல் தொடக்கம்: 4 நகரங்களில் நடக்கிறது

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி தொடா் (டிஎன்பிஎல் 2022) வரும் ஜூன் 23-இல் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:46 pm

DIN

சென்னை: தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி தொடா் (டிஎன்பிஎல் 2022) வரும் ஜூன் 23-இல் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழாண்டு திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூா் உள்ளிட்ட 4 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடத்தப்படும் இப்போட்டி வழக்கமாக திண்டுக்கல் நத்தம், திருநெல்வேலி சங்கா்நகா் மைதானங்களில் நடைபெறும். தற்போது புதிதாக கோவை எஸ்என்ஆா் கல்லூரி, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானங்களில் நடக்கிறது.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் ஜூன் 23-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆஃப் ஆட்டங்கள் சேலம், கோவையில் நடக்கிறது. இறுதி ஆட்டம் ஜூலை 31-இல் கோவையில் நடக்கிறது. மொத்தம் 6 இரட்டை ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை ஆட்டம் 3.15 மணிக்கும், இரவு ஆட்டம் 7.15 மணிக்கும் தொடங்கும். பாா்வையாளா்களுக்கு அனுமதி உண்டு என டிஎன்சிஏ செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.